திருநுதல் விழியும் பவளவாய் இதழும்
திலகமும் உடையவன் சடைமேற்
புரிதரு மலரின் தாதுநின் றூதப்
போய்வருந் தும்பிகாள், இங்கே
கிரிதவழ் முகிலின் கீழ்த்தவழ் மாடங்
கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வருதிறல் மணியம் பலவனைக் கண்டென்
மனத்தையுங் கொண்டுபோ துமினே.