திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

மூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்
முகத்தலை யகத்தமர்ந் தினிய
பாலுமாய் அமுதாம் பன்னகா பரணன்
பனிமலர்த் திருவடி யிணைமேல்
ஆலைஅம் பாகின் அனையசொற் கருவூர்
அமுதுறழ் தீந்தமிழ் மாலை
சீலமாப் பாடும் அடியவ ரெல்லாம்
சிவபதம குறுகிநின் றாரே.

பொருள்

குரலிசை
காணொளி