பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வண்ண வெண்பொடிப் பூசும் மார்பின் வரி அரவம் புனைந்து, பெண் அமர்ந்து, எரி ஆடல் பேணிய பிஞ்ஞகன் மேய இடம், விண் அமர் நெடுமாடம் ஓங்கி விளங்கிய கச்சி தன்னுள்- திண்ண மாம்பொழில் சூழ்ந்த ஏகம்பம் சேர, இடர் கெடுமே.