திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை
வீணை ஏந்தி,
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் இலை
சூழ் கானில்
ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ்
ஓசைச்
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு
நணாவே.

பொருள்

குரலிசை
காணொளி