முத்து ஏர் நகையாள் இடம் ஆக, தம் மார்பில் வெண்
நூல் பூண்டு
தொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம் போலும்
சோலை சூழ்ந்த
அத் தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத்
தும்பி,
தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு
நணாவே.