வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம்
கொண்டு
புல்லார் புரம் மூன்று எரித்தார்க்கு இடம்போலும் புலியும்
மானும்
அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார்
கூடி,
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள் புரியும் திரு
நணாவே.