கல் வித்தகத்தால் திரை சூழ் கடல் காழிக் கவுணி சீர்
ஆர்
நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன்
எண்ணும்
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,
வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம்
மண்ணின்மேலே.