திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல்
கொண்டு
மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும்
மிடைந்து வானோர்,
"ஐய! அரனே! பெருமான்! அருள் என்று என்று ஆதரிக்க,
செய்யகமலம் மொழி தேன் அளித்து இயலும் திரு
நணாவே.

பொருள்

குரலிசை
காணொளி