பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அன்னம் தாவும் அணி ஆர் பொழில், மணி ஆர் புன்னை பொன் அம் தாது சொரி பாதிரிப்புலியூர் தனுள் முன்னம் தாவி அடிமூன்று அளந்தவன், நான்முகன், தன்னம் தாள் உற்று உணராதது ஓர் தவ நீதியே.