பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அன்பு பெருக உருகி உள்ளம் அலைய அட்டாங்க பஞ்சாங்கம் ஆக முன்பு முறைமை யினால் வணங்கி, முடிவு இலாக் காதல் முதிர ஓங்கி, நன் புலன் ஆகிய ஐந்தும் ஒன்றி, நாயகன் சேவடி எய்தப் பெற்ற இன்ப வெள்ளத்து இடை மூழ்கி நின்றே, இன்னிசை வண்தமிழ் மாலை பாட.