திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், “பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ?” என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.

பொருள்

குரலிசை
காணொளி