உமையவளை ஒரு பாகம் சேர்த்தினான் காண்,
உகந்து ஒலி நீர்க் கங்கை சடை ஒழுக்கினான் காண்,
இமய வட கயிலைச் செல்வன் தான் காண், இல்
பலிக்குச் சென்று உழலும் நல் கூர்ந்தான் காண்,
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன் தான்
காண், தத்துவன் காண், உத்தமன் காண், தானே ஆய
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர்
கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.