திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

முந்தை காண், மூவரினும் முதல் ஆனான் காண், மூ
இலை வேல் மூர்த்தி காண், முருக வேட்குத்
தந்தை காண், தண் கட மா முகத்தினாற்குத் தாதை
காண், தாழ்ந்து அடியே வணங்குவார்க்குச்
சிந்தைகாண், சிந்தாத சித்தத்தார்க்குச் சிவன் அவன்
காண், செங்கண் மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.

பொருள்

குரலிசை
காணொளி