பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய புண்ணியனே! மின் போலும் புரிநூல், விடை ஏறிய வேதியனே! தென்பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி தன்னில் அன்பா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.