திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கௌசிகம்

கண் ஆரும் நுதலாய்! கதிர் சூழ் ஒளி மேனியின்மேல்
எண் ஆர் வெண்பொடி-நீறு அணிவாய்! எழில் ஆர் பொழில்
சூழ்
திண் ஆர் வண் புரிசைத் திரு வான்மியூர் உறையும்
அண்ணா! உன்னை அல்லால் அடையாது, எனது ஆதரவே.

பொருள்

குரலிசை
காணொளி