திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

அரவமே கச்சு அது ஆக அசைத்தான்; அலர்க்கொன்றை
அம்தார்
விரவி, வெண் நூல் கிடந்த விரை ஆர் வரைமார்பன்; எந்தை;
பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து, படர்புன்சடை மேல்
உரவு நீர் ஏற்ற பெம்மான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

பொருள்

குரலிசை
காணொளி