கமையொடு நின்ற சீரான்; கழலும் சிலம்பும் ஒலிப்ப,
சுமையொடு மேலும் வைத்தான், விரிகொன்றையும்
சோமனையும்;
அமையொடு நீண்ட திண்தோள் அழகு ஆய பொன்-தோடு
இலங்க,
உமையொடும் கூடி நின்றான்; உறையும்(ம்) இடம் ஒற்றியூரே