பெற்றியால் பித்தன் ஒப்பான்; பெருமான்; கருமான் உரி-தோல்
சுற்றியான்; சுத்தி, சூலம், சுடர்க்கண் நுதல்மேல் விளங்க,
தெற்றியான் செற்று, அரக்கன்(ன்) உடலைச் செழு
மால்வரைக்கீழ்
ஒற்றியான்; முற்றும் ஆள்வான்; உறையும்(ம்) இடம்
ஒற்றியூரே.