திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

திருவின் ஆர் போதினாலும் திருமாலும், ஒர் தெய்வம் முன்னி,
தெரிவினால் காணமாட்டார்; திகழ் சேவடி சிந்தை செய்து,
பரவினார் பாவம் எல்லாம் பறைய, படர் பேர் ஒளியோடு
ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே

பொருள்

குரலிசை
காணொளி