திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

நன்றியால் வாழ்வது உள்ளம், உலகுக்கு ஒரு நன்மையாலே,
கன்றினார் மும்மதிலும் கருமால்வரையே சிலையா,
பொன்றினார் வார் சுடலைப் பொடி-நீறு அணிந்தார் அழல்
அம்பு
ஒன்றினால் எய்த பெம்மான் உறையும்(ம்) இடம் ஒற்றியூரே.

பொருள்

குரலிசை
காணொளி