பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும் பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே.