பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பார்த்தனோடு அமர் பொரூது பத்திமை காண்பர் போலும்; கூர்த்த வாய் அம்பு கோத்துக் குணங்களை அறிவர் போலும்; பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும்- தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே.