பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தெரித்த கணையால்-திரி புரம் மூன்றும் செந் தீயில் மூழ்க எரித்த இறைவன், இமையவர் கோமான், இணை அடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன், சிரித்த முகம் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?