பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
சுற்றும் அமரர், சுரபதி, “நின் திருப்பாதம் அல்லால் பற்று ஒன்று இலோம்” என்று அழைப்பப் பரவையுள் நஞ்சை உண்டான், செற்று அங்கு அநங்கனைத் தீ விழித்தான், தில்லை அம்பலவன், நெற்றியில் கண் கண்ட கண் கொண்டு மற்று இனிக் காண்பது என்னே?