பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
மாசு இல் ஒள்வாள் போல் மறியும் மணி நீர்த் திரைத் தொகுதி ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கல் உற்றால், பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு, வீசும் கெடில வடகரைத்தே-எந்தை வீரட்டமே.