திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பூமேலானும் பூமகள் கேள்வனும்
நாமே தேவர்!ழு எனாமை, நடுக்கு உற
தீ மேவும்(ம்) உருவா! திரு ஏகம்பா!
ஆமோ, அல்லல்பட, அடியோங்களே?

பொருள்

குரலிசை
காணொளி