திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டபாடை

உழக்கே உண்டு, படைத்து ஈட்டி வைத்து, இழப்பார்களும், சிலர்கள்;
“வழக்கே?” எனில், “பிழைக்கேம்” என்பர், மதி மாந்திய மாந்தர்;
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம் ஆவது செயன்மின்!
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே!

பொருள்

குரலிசை
காணொளி