திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

"மைம்மலர்க்கோதை மார்பினர்" எனவும், "மலைமகள் அவளொடு
மருவினர்" எனவும்,
"செம்மலர்ப்பிறையும் சிறை அணி புனலும் சென்னிமேல் உடையர்,
எம் சென்னிமேல் உறைவார்"
தம் மலர் அடி ஒன்று அடியவர் பரவ, தமிழ்ச்சொலும் வடசொலும்
தாள் நிழல் சேர,
அம் மலர்க்கொன்றை அணிந்த எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி