திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

நீடு இருஞ்சடைமேல் இளம்பிறை துளங்க, நிழல் திகழ் மழுவொடு,
நீறு மெய் பூசி,
தோடு ஒரு காதினில் பெய்து, வெய்து ஆய சுடலையில் ஆடுவர்;
தோல் உடை ஆக,
காடு அரங்கு ஆக, கங்குலும் பகலும், கழுதொடு பாரிடம் கைதொழுது
ஏத்த,
ஆடுஅரவு ஆட, ஆடும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது ஆட்சி
கொண்டாரே.

பொருள்

குரலிசை
காணொளி