"விண் உலாம் மதியம் சூடினர்" எனவும், "விரிசடை உள்ளது,
வெள்ளநீர்" எனவும்,
"பண் உலாம் மறைகள் பாடினர்" எனவும், "பல புகழ் அல்லது
பழி இலர்" எனவும்,
எண்ணல் ஆகாத இமையவர், நாளும், ஏத்து அரவங்களோடு எழில்
பெற நின்ற
அண்ணல்; ஆன் ஊர்தி ஏறும் எம் அடிகள் அச்சிறுபாக்கம் அது
ஆட்சி கொண்டாரே.