திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: புறநீர்மை

மெய்யரே மெய்யர்க் ; கிடுதிரு வான
விளக்கரே ; எழுதுகோல் வளையாள்
மையரே ; வையம் பலிதிரிந் துறையும்
மயானரே ; உளங்கலந் திருந்தும்
பொய்யரே பொய்யர்க் ; கடுத்தவான் பளிங்கின்
பொருள்வழி இருள்கிழித் தெழுந்த
ஐயரே யாகில் அவரிடம் களந்தை
அணிதிகழ் ஆதித்தேச் சரமே.

பொருள்

குரலிசை
காணொளி