சரிந்ததுகில், தளர்ந்தஇடை அவிழ்ந்தகுழல்
[இளந்தெரிவை
இருந்தபரி சொருநாள்கண் டிரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர்தம் முழங்கொலியும்
[வழங்கொலியும்
திருந்துவிழ வணிகோடைத் திரைலோக்கிய சுந்தரனே.