அன்னமாய் விசும்பு பறந்தயன்தேட
அங்ஙனே பெரியநீ சிறிய
என்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை யென்றும்நான் மறக்கேன் !
முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா !
முக்கணா ! நாற்பெருந் தடந்தோட்
கன்னலே ! தேனே ! அமுதமே !கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.