அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய
அடிச்சிலம் பலம்பவந் தொருநாள்
உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை
உய்யக்கொண் டருளினை ! மருங்கிற்
கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற்
கொடியள்என் றவிர்சடை முடிமேற்
கங்கைகொண் டிருந்த கடவுளே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.