திருமுறை 9 - திருவிசைப்பா & திருப்பல்லாண்டு - 9 ஆசிரியர்கள்

29 பதிகங்கள் - 303 பாடல்கள் - 8 கோயில்கள்

பதிகம்: 
பண்: பஞ்சமம்

ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும்,
அழகிய விழியும், வெண் ணீறும்,
சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல்
தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும்
மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்
முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக்
கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே.

பொருள்

குரலிசை
காணொளி