ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்! அந்தணர் பிரியாத
சிற்றம்பலம்
நாடினாய், இடமா! நறுங்கொன்றை நயந்தவனே!
பாடினாய், மறையோடு பல்கீதமும்! பல்சடைப் பனி கால் கதிர்
வெண்திங்கள்
சூடினாய்! அருளாய், சுருங்க எம தொல்வினையே!