தொல்லையார் அமுது உண்ண, நஞ்சு உண்டது ஓர் தூ
மணிமிடறா! பகுவாயது ஓர்
பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா!
தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால்,
கழல்சேவடி கைதொழ,
இல்லை ஆம் வினைதான் எரிய(ம்) மதில் எய்தவனே!