நீலத்து ஆர் கரிய மிடற்றார், நல்ல நெற்றிமேல் உற்ற
கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப் பொடி நீறு அணிவார், சடையார்,
சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால், கழல் சேவடி
கைதொழ,
கோலத்தாய்! அருளாய்! உன காரணம் கூறுதுமே.