ஆகம் தோய் அணி கொன்றையாய்! அனல் அங்கையாய்!
அமரர்க்கு அமரா! உமை
பாகம் தோய் பகவா! பலி ஏற்று உழல் பண்டரங்கா!
மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய்!
மழுவாளினாய்! அழல்
நாகம் தோய் அரையாய்! அடியாரை நண்ணா,
வினையே.