வேயின் ஆர் பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்!
விகிர்தா! உயிர்கட்கு அமுது
ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே!
தீயின் ஆர் கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்!
திகழ்கின்ற சிற்றம்பலம்
மேயினாய்! கழலே தொழுது எய்துதும், மேல் உலகே.