கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய்! எருது ஏறினாய்!
நுதல்
பட்டமே புனைவாய்! இசை பாடுவ பாரிடமா,
நட்டமே நவில்வாய்! மறையோர் தில்லை, நல்லவர், பிரியாத
சிற்றம்பலம்
இட்டமா உறைவாய்! இவை மேவியது என்னை கொலோ