கூறு அணிந்தார், கொடியிடையை; குளிர்சடைமேல்
இளமதியோடு
ஆறு அணிந்தார்; ஆடு அரவம் பூண்டு உகந்தார்; ஆள்
வெள்ளை
ஏறு அணிந்தார், கொடி அதன்மேல்; என்பு அணிந்தார்,
வரைமார்பில்,
நீறு அணிந்தார் கலிக் கச்சி நெறிக்காரைக்காட்டாரே.