வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல்
விடம்
தான் அமுது செய்து, அருள்புரிந்த சிவன் மேவும் மலை
தன்னை வினவில்
ஏனம் இனமானினொடு கிள்ளை தினை கொள்ள, எழில் ஆர்
கவணினால்,
கானவர் தம் மா மகளிர் கனகம் மணி விலகு
காளத்திமலையே.