“இனது அளவில், இவனது அடி இணையும், முடி, அறிதும்”
என இகலும் இருவர்
தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலைதன்னை
வினவில்
புனவர் புனமயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம்
புணரும் நாள
கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு
காளத்திமலையே.