காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு
காளத்திமலையை,
மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு
தலைவன்-
நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன்-உரை நல்ல தமிழின்
பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர்; பரலோகம்
எளிதே.