மலையின் மிசை தனில் முகில் போல் வருவது ஒரு மதகரியை
மழை போல் அலறக்
கொலை செய்து, உமை அஞ்ச, உரி போர்த்த சிவன் மேவும்
மலை கூறி வினவில்
அலை கொள் புனல் அருவி பலசுனைகள் வழி இழிய, அயல்
நிலவு முது வேய்
கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து
காளத்திமலையே.