திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வல்லை வரு காளியை வகுத்து, “வலி ஆகி மிகு தாருகனை நீ
கொல்!” என விடுத்து, அருள் புரிந்த சிவன் மேவும் மலை
கூறி வினவில்
பல்பல இருங் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனம்
ஆய்,
கல் அதிர நின்று, கரு மந்தி விளையாடு காளத்திமலையே.

பொருள்

குரலிசை
காணொளி