திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி,
சடைமேல்
தூய மதி சூடி, சுடுகாடில் நடம் ஆடி, மலை தன்னை வினவில்
வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும்
நயனம்
காய் கணையினால் இடந்து, ஈசன் அடி கூடு
காளத்திமலையே.

பொருள்

குரலிசை
காணொளி