திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

எரி அனைய சுரிமயிர் இராவணனை ஈடு அழிய, எழில் கொள்
விரலால்,
பெரிய வரை ஊன்றி அருள் செய்த சிவன் மேவும் மலை
பெற்றி வினவில்
வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால்,
கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு
காளத்திமலையே.

பொருள்

குரலிசை
காணொளி