நின்று கவளம் பல கொள் கையரொடு, மெய்யில் இடு
போர்வையவரும்,
நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி
வினவில்
குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று
குலவி,
கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு
காளத்திமலையே.